சிங்கப்பூரில் DBS ஆன்லைன் வங்கி மற்றும் கட்டண சேவைகளில் தடங்கல் ஏற்பட்டுள்ளது. ATM ஐ பயன்படுத்த முடியவில்லை என்றும் வாடிக்கையாளர்கள் கூறினர்.
சில வாடிக்கையாளர்கள் DBS-ன் PayLah சேவைகளையும் பயன்படுத்துவதில் சிக்கல்கள் மற்றும் தடங்கல் இருப்பதாக தெரிவித்தனர்.
சுமார் பிற்பகல் 3.50 மணியளவில் DBS சேவைகளைப் பயன்படுத்த முடியவில்லை என்று கிட்டத்தட்ட 3500 புகார்கள் Down detector-ல் பதிவாகி இருந்தன.
WhatsApp, Facebook மற்றும் Singtel போன்றவற்றை பயன்படுத்துவதிலும் சிக்கல்கள் இருப்பதாக கூறினார்கள்.
பரிவர்த்தனைகள் பாதியில் தடைப்பட்டதாகவும், சிக்கல்கள் தீரும் என்று அரை மணி நேரத்திற்கும் மேலாக காத்திருந்தாகவும் வாடிக்கையாளர் ஒருவர் கூறினார்.