சிங்கப்பூரில் ரயில் நிலைய அதிகாரியிடம் மதுபோதையில் தகராறு செய்து தாக்கிய தமிழர்…..

சிங்கப்பூரில் 24 வயதுடைய மீனாட்சி சுந்தரம் பாண்டிசெல்வத்துக்கு 4 வார சிறைத் தண்டனையும்,800 வெள்ளி அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

ரயில் நிலைய அதிகாரியிடம் மதுபோதையில் தகராறு செய்து அவரை தாக்கியதாக பாண்டிசெல்வம் மீது குற்றஞ்சாட்டப்பட்டது.

இந்த சம்பவம் புங்கோல் MRT நிலையத்தில் இவ்வாண்டு ஜனவரி 16-ஆம் தேதி நள்ளிரவு 12.15 மணியளவில் நடந்தது.

55 வயதுடைய அதிகாரி ரயிலுக்குள் யாராவது இருக்கிறார்களா என்பதை உறுதிப்படுத்துவதற்காக சென்றுள்ளார்.

அப்போது மது போதையில் இருந்த பாண்டிசெல்வம் தள்ளாடி கொண்டு இருப்பதை அதிகாரி பார்த்துள்ளார்.பாண்டி செல்வம் ரயிலுக்குள் இருந்து வெளியேற மறுத்துள்ளார்.

அவரை வெளியேறு மாறு அதிகாரி கூறியுள்ளார். பின்னர் அங்கிருந்து அவரை அதிகாரி வெளியேற்றினார்.

கோபமடைந்த பாண்டி செல்வம் பொருட்களை வீசத் தொடங்கினார்.முரட்டு தனமாக நடந்து கொண்டார்.

அங்கிருந்து வெளியேறவிட்டால் காவல்துறையை தொடர்பு கொள்ள போவதாக அதிகாரி அவரிடம் கூறினார்.

இருவருக்கும் இடையே சண்டை மோசமாகி விட்டது. இருவரும் ரயிலுக்குள் புகுந்து சண்டை போட்டனர்.

அதிகாரியின் தலையை ரயில் கதவின் மீது பலமுறை மோதினார்.

அவர்கள் இருவரும் மற்றொரு அதிகாரியால் விலக்கப் பட்டனர்.

காயமடைந்த அதிகாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

மதுபோதையில் அதிகாரியை தாக்கிய குற்றத்திற்காக பாண்டிசெல்வத்துக்கு சிறைத்தண்டனையும், அபராதமும் விதிக்கப்பட்டது.