சக்திவாய்ந்த நிலநடுக்கம்…..தனது குடும்பத்தில் 11 பேரை இழந்து தவிக்கும் முதியவர்…….

ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் குறைந்தது 2400 பேர் உயிரிழந்ததாகவும், 2000-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர் என்றும் தெரிவித்தனர்.

அக்டோபர் 7 ஆம் தேதி அன்று ஏற்பட்ட இந்த 6.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம், இந்த ஆண்டு உலகில் ஏற்பட்ட நிலநடுக்கங்களில் மிகவும் மோசமான ஒன்றாகும்.

ஆயிரக்கணக்கான வீடுகள் தரைமட்டமானதாகவும், உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் பெண்கள் மற்றும் குழந்தைகள் என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

60 வயது மதிக்கத்தக்க ஒருவர், இந்த நிலநடுக்கத்தில் தனது குடும்ப உறுப்பினர்கள் 11 பேர் உயிரிழந்ததாக தெரிவித்தார்.

பல பகுதிகளில் மீட்புப் பணிகள் கிட்டத்தட்ட முடிந்து விட்டதாகவும், சில பகுதிகளில் இன்னும் நடந்து கொண்டிருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஐக்கிய நாடுகளின் நிறுவனம் 5 மில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பிலான நிவாரண உதவியை வழங்கவிருப்பதாக தெரிவித்துள்ளது.

வெப்பநிலை குறைவதால் உணவு, மருந்து தவிர உயிர் பிழைத்தவர்கள் தங்குவதற்கு இடவசதி தேவைப்படுவதாக உலக சுகாதார அமைப்பின் தலைவர் கூறினார்.

ஒரு சில நாடுகளில் இருந்து நிவாரண பொருட்கள் உடனடியாக வந்ததாக தெரிவிக்கப்பட்டது.