Koinu சூறாவளியால் ஹாங்காங்கில் கனமழை மற்றும் பலத்த சூறாவளி காற்று வீசி வருகிறது.
இதனால் அப்பகுதியில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
வரலாறு காணாத மழையால் முடங்கிய நகரம் தற்போது நீரில் மூழ்கியுள்ளது.
வெள்ளப்பெருக்கு காரணமாக அங்குள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
வானிலை ஆய்வு மையம் மலைப்பாங்கான இடங்களில் வசிக்கும் மக்களுக்கு நிலச்சரிவு எச்சரிக்கையை விடுத்தது.
வெள்ளப்பெருக்கால் போக்குவரத்து சேவைகள் பாதிக்கப்பட்டன.
இதனால் பயணிகள் விமான நிலையங்கள் மற்றும் மெட்ரோ நிலையங்களில் சிக்கித் தவித்தனர்.
குவாங்டாங் மாகாணத்தில் மணிக்கு 100 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசியது.
இதனால் அதன் பல்வேறு மாவட்டங்களில் புயல் மற்றும் சூறாவளி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.