சிங்கப்பூரில் எஸ்கலேட்டரில் பயணித்தபோது மூவருக்கு நேர்ந்த விபரீதம்…..

வியாழக்கிழமை அன்று Clementi MRT நிலையத்தில் எஸ்கலேட்டரில் பயணித்த மூவர் தவறி விழுந்து காயம் ஏற்பட்டது.

இச்சம்பவத்தை அடுத்து எஸ்கலேட்டர் ஆய்வு செய்யப்பட்டது. சோதனை முடிவில் உபகரண அசாதாரணங்கள் எதுவும் கண்டறிய படவில்லை என்று கட்டிடம் மற்றும் கட்டுமான ஆணையத்தின் (BCA) செய்தி தொடர்பாளர் கூறினார்.

இச்சம்பவம் காலை 9.30 மணியளவில் 3150 Commonwealth Avenue West இல் நடந்தது. இது குறித்து சிங்கப்பூர் குடிமை தற்காப்பு படைக்கு தகவல் வந்ததாக கூறியது.

காயமடைந்த மூவரையும் Ng Teng Fong பொது மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக தெரிவித்தது.

அவர்களுக்கு மோசமான காயங்கள் மற்றும் வெட்டுகள் ஏற்பட்டிருந்தது.

The Straits Time கேட்ட கேள்விகளுக்கு SMRT Train President Lam Sheau Kai பதிலளித்தார்.

எஸ்கலேட்டர் முழுமையாக சோதனை நடத்தப்பட்டது.எஸ்கலேட்டரில் எந்த தவறும் இல்லை என்பதை உறுதிப்படுத்திய பிறகு மீண்டும் சேவைக்கு கொண்டு வரப்பட்டது என்றும் கூறினார்.