மெக்சிகோவில் பேருந்து கவிழ்ந்து விபத்து……மெக்சிகோ வழியாக அமெரிக்கா செல்ல முயற்சி செய்த போது நேர்ந்த விபரீதம்…..

அக்டோபர் 6ஆம் தேதி அன்று (நேற்று) தெற்கு மெக்ஸிகோவில் இடம் பெயர்ந்தோரை ஏற்றிச் சென்ற பேருந்து கவிழ்ந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் குறைந்தது 18 பயணிகள் உயிரிழந்ததாகவும், 27 பேர் காயமடைந்தனர் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Oaxaca-வையும் அதன் அண்டை மாநிலமான Puebla-வையும் இணைக்கும் நெடுஞ்சாலையில் இந்த விபத்து நடந்ததாக தெரிவிக்கப்பட்டது.

காயம் அடைந்தவர்களை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர்.

அமெரிக்க-மெக்சிகோ எல்லையில் இது போன்ற பல விபத்துகள் ஏற்பட்டுள்ளன.பலர் காணாமல் போனதாகவும் தெரிவிக்கப்பட்டது.

2014 ஆம் ஆண்டிலிருந்து அமெரிக்காவில் 8200-க்கும் மேற்பட்ட இடம் பெயர்ந்தோர் உயிரிழந்துள்ளனர்.அல்லது காணாமல் போனதாக கூறப்படுகிறது.

அவர்களில் பெரும்பாலானோர் மெக்சிகோ வழியாக அமெரிக்காவை அடைய முயற்சி செய்தவர்கள் என்று International Organization for Migration தெரிவித்தது.

சட்டவிரோதமாக அமெரிக்காவிற்குள் நுழைபவர்களை தடுக்கவும், விபத்துகள் ஏற்படாமல் இருக்கவும் கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று இரு நாடுகளும் உறுதி அளித்தன.