சிங்கப்பூரில் வேலையிடத்தில் ஊழியருக்கு ஏற்பட்ட விபத்து……கால் துண்டிப்பு……

Hoy San Stevedoring நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர் ஒருவர் அங்குள்ள கிடங்கில் உள்ள வேலையை படம் எடுக்க சென்றார்.

அப்போது சக ஊழியர் ஒருவர் எஃகு சுருள்களைத் தூக்கும் இயந்திரத்தைப் பயன்படுத்தி கொண்டுள்ளார்.

அதனைப் படம் எடுக்க முயன்றபோது Forklift ஊழியரின் காலில் மோதியது.அவரது வலது காலை மூட்டுக்கு கீழே அகற்ற வேண்டிய நிலை ஏற்பட்டது.இந்த விபத்து கடந்த 2020-ஆம் ஆண்டு ஜூலை 21-ஆம் தேதி நடந்தது.

இந்த விபத்து குறித்து மனிதவள அமைச்சகம் சோதனை நடத்தியது.

Hoy San Stevedoring நிறுவனம் வேலையிடங்களில் என்னென்ன ஆபத்துகள் இருக்கக்கூடும் என்பதைக் கண்டறிவதற்கான எந்த சோதனையும் மேற்கொள்ளவில்லை என்பது தெரியவந்தது.

இது போன்ற ஆபத்துகள் தடுப்பதற்கான பாதுகாப்பு நடவடிக்கைகளை அந்நிறுவனம் செயல்படுத்தவில்லை என்று கூறியது.

பணியிடத்தில் ஊழியரின் காலில் காயம் ஏற்பட்டுள்ளதால், அந்நிறுவனத்துக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. சுமார் $240,000 சிங்கப்பூர் டாலர் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தது.