சிங்கப்பூரின் ஓட்டப்பந்தய வீராங்கனை சாந்தி பெரேரா, ஆசிய விளையாட்டு போட்டிகளில் பெண்களுக்கான 200 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் 23.03 வினாடிகளில் இலக்கை அடைந்து தங்கப்பதக்கம் வென்றார்.
ஏறக்குறைய 49 ஆண்டுகளுக்குப் பிறகு ஆசிய விளையாட்டு போட்டியில் மீண்டும் சிங்கப்பூர் தங்கம் வென்றது குறிப்பிடத்தக்கது. இந்த பெருமை சாந்தி பெரேராவையே சேரும்.
இந்த ஆண்டு இவர் பெற்ற ஆசிய பதக்கங்கள் தவிர, கம்போடியா SEA கேம்ஸ் மற்றும் ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டிகளிலும் 100 மீட்டர் மற்றும் 200 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தங்கப்பதக்கங்கள் வென்றார்.
அதோடு மட்டுமில்லாமல் 2024ல் Paris-ல் நடைபெறவிருக்கும் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் அளவிற்கு தகுதி பெற்றுள்ளார் என்று தெரிவித்தனர்.
ஆனால் இது எதுவுமே அவருக்கு எளிதாக கிடைக்கவில்லை என்றும், தனது இந்த பயணம் மிகவும் கடினமானதாக இருந்தது என்றும் அவர் கூறினார்.
பெரேராவின் பயிற்சியாளர், இவரது சாதனையை பற்றி தான் மிகவும் பெருமை அடைந்ததாக தெரிவித்தார். மேலும் அவரது இந்த வெற்றிப் பயணம் மற்ற விளையாட்டு வீரர்களுக்கும் ஒரு உந்துதலாக இருக்கும் என்று அவர் கூறினார்.
தமது வெற்றிக்கு காரணமாக இருந்த பலரிடம் தான் நன்றி தெரிவிக்க விரும்புவதாக பெரேரா கூறினார்.