35 வயதான Joyce Tan என்ற பெண்மணி தனது சக ஊழியருக்கு கடன் கொடுக்க விரும்பாத காரணத்தால் தனது பணம் கொள்ளையடிக்கப்பட்டதாக பொய் சொன்னார்.
மார்ச் 16 அன்று தான் பணத்துடன் வீட்டை விட்டு வெளியேறிய போது இரண்டு ஆண்கள் தன்னை கத்தி முனையில் மிரட்டி பணத்தை கொள்ளை அடித்ததாக காவல்துறையினரிடம் புகார் அளித்தார்.
மேலும் அந்த ஆண்களின் வயது, அணிந்திருந்த உடை போன்ற தகவல்களை விவரமாக விவரித்தார்.
காவல்துறையினரும் அந்த இருவரை தீவிரமாக தேடும் பணியில் ஈடுபட்டனர்.
மூன்று மணி நேரம் கழித்து அப்படி ஒரு சம்பவம் நடக்கவில்லை என்றும், சக ஊழியருடனான நட்பை கெடுக்க விரும்பாததால் தான் அவ்வாறு கூறியதாகவும் Joyce ஒப்புக் கொண்டார்.
அரசாங்க ஊழியரிடம் பொய்யான தகவல் அளித்து அவர்களின் நேரத்தை வீணடித்த குற்றத்திற்காக 2 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.