வியட்நாமில் மத்திய பகுதிகள் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.அதனால் அங்கு வசித்த ஆயிரக்கணக்கனோர் அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர்.சாலைகள் வெள்ளத்தால் சூழப்பட்டது.
இன்னும் பலர் தண்ணீர், உணவு, மின்சார வசதிகள் இல்லாமல் சிக்கி தவிப்பதாக சொல்லப்படுகிறது.
கடும் வெள்ளத்தில் பயிர்கள் மூழ்கி சேதமடைந்து உள்ளதாகவும் கூறப்பட்டது.
மரங்கள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது.
செப்டம்பர் 28-ஆம் தேதி (இன்று) அதிகமாக மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்பட்டது.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு எச்சரிக்கை அறிவிப்புகளும் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
அங்கு வாகனங்கள் நுழையாமல் இருப்பதற்காக அதிகாரிகள் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.மக்கள்களுக்கும் அவர்கள் உதவி வருகின்றனர்.