2023 ஆம் ஆண்டின் நான்காவது மற்றும் கடைசி சூப்பர் மூனை வருகின்ற வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 29) மாலை காணத்தவறாதீர்கள்.
இந்த சூப்பர் மூன், இரவு 7 மணிக்கு உதயமாகும் என்று கூறப்படுகிறது.
நிலவின் சுற்றுப்பாதை, பூமிக்கு அருகில் இருக்கும் போது சூப்பர் மூன்கள் தோன்றுகின்றன.
இதனால் நிலவு வழக்கத்தை விட பெரிதாகவும், பிரகாசமாகவும் தோன்றும்.
இந்த முழு நிலவை அறுவடை நிலவு என்றும் குறிப்பிடுவர்.
இந்த காலகட்டத்தில் gibbous நிலவு மற்ற மாதங்களோடு ஒப்பிடும் பொழுது முன்னதாகவே உதயமாகும் என்று கூறப்படுகிறது.
ஏற்கனவே ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் மூன்று சூப்பர் மூன்கள் தோன்றின.
பொது இடங்களான Marina Barrage, East Coast Park மற்றும் Southern Ridges பகுதிகளில் இருந்து இந்த சூப்பர் மூனை எந்தவித தடையும் இன்றி கண்டுகளிக்கலாம்.
பார்வையாளர்கள், இந்த சூப்பர் மூனுடன் சேர்ந்து Jupiter, Saturn மற்றும் Mercury ஆகியவற்றையும் காண முடியும் என்று தெரிவிக்கப்பட்டது.
பார்வையாளர்கள், இந்த வாய்ப்பை தவறவிட்டால், அடுத்த சூப்பர் மூனை காண்பதற்கு ஒரு வருடம் காத்திருக்க வேண்டும் என்று கூறப்படுகிறது.