நிலக்கரி சுரங்கத்தில் தீ விபத்து….. தீக்கு பலியான 16 உயிர்……

தென்மேற்கு சீனாவின் Guizhou மாகாணத்தில் உள்ள Shanjiaoshu நிலக்கரி சுரங்கத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 16 பேர் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

கன்வேயர் பெல்ட்டில் தீப்பிடித்ததில் 16 பேர் சிக்கிக் கொண்டனர் என்றும், தீப்பிடித்ததற்கான காரணம் மற்றும் சேதம் பற்றிய கூடுதல் விவரங்கள் எதுவும் தெரியவில்லை என்றும் அவர்கள் கூறினர்.