மொராக்காவை உலுக்கிய நிலநடுக்கம்….. பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு….

செப்டம்பர் 8ஆம் தேதி மொராக்கோவில் ஏற்பட்ட 6.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தில், சுமார் 2900க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

குறைந்தது 59,674 வீடுகள் சேதம் அடைந்திருப்பதாகவும்,அதில் 32 சதவீதம் முற்றிலும் இடிந்து விழுந்துவிட்டதாக கூறப்பட்டது.

சரியான சாலை வசதிகள் மற்றும் பொது வசதிகள் கூட இல்லாத கிராமப்பகுதிகளே நிலநடுக்கத்தால் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளன.

இந்த நிலநடுக்கம், High Atlas மலைப்பகுதியில் உள்ள 2,930 கிராமங்களை சேதப்படுத்தியது. இது சுமார் 2.8 மில்லியன் மக்கள்தொகை கொண்ட பகுதி ஆகும்.

நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ஒரு வருடத்திற்கு மாதம் 2500 Dirham-கள் வழங்கப்படும்.

மேலும் முழுமையாக சேதம் அடைந்த வீடுகளுக்கு 1,40,000 இழப்பீடும், பகுதியளவு சேதமடைந்த வீடுகளுக்கு 80,000 இழப்பீடும் வழங்கப்படும் என்று, அமைச்சர் Faouzi Lekjaa தெரிவித்தார்.

மொத்தத்தில், அடுத்த ஐந்து ஆண்டுகளில் உள்கட்டமைப்பை மேம்படுத்த, 120 பில்லியன் Dirham-களை செலவிட திட்டமிட்டுள்ளது.