ஆண்ட்ராய்டு மோசடி…… பொதுமக்களே உஷார்…..

சிங்கப்பூரில் ஆண்ட்ராய்டு மோசடிகளின் புதிய மாறுபாட்டை பற்றி ஆலோசனைகளை காவல்துறை வழங்கி உள்ளது.

இதில் மொபைலின் i-banking பயன்பாட்டில் அங்கீகரிக்கப்படாத பரிவர்த்தனைகளை செய்த பிறகு, பாதிக்கப்பட்ட மொபைலில் factory reset-ஐ தொடங்கும்படி மோசடிக்காரர்கள் கூறுவர்.

பாதிக்கப்பட்டவர்கள், சமூக ஊடகங்களில் சில விளம்பரங்களை பார்த்து, அவற்றை தொடர்பு கொள்கின்றனர்.

அப்போது ஒரு app-ஐ அவர்கள் டவுன்லோட் செய்ய அறிவுறுத்தப்படுவார்கள்.

அவ்வாறு செய்த பிறகு, அவர்களுக்கு தெரியாமலேயே அவர்களது வங்கி விவரங்கள் திருடப்படும்.

இந்த ஆண்டு முதல் பாதியில் மட்டும் 750-க்கும் மேற்பட்டவர்கள் இந்த மோசடியில் சிக்கி, குறைந்தது 10 மில்லியன் சிங்கப்பூர் டாலர்களை இழந்துள்ளனர் என்று காவல்துறை தெரிவித்துள்ளது.

எனவே ஆண்ட்ராய்டுக்கான Google Play Store மூலம் மட்டுமே app-களை டவுன்லோட் செய்யுமாறும், ScamShield appஐ பயன்படுத்துதல், two-factor authentication மற்றும் transaction limit போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும், பொதுமக்களிடம் காவல்துறையினர் கேட்டுக்கொண்டனர்.

ஒருவேளை சந்தேகப்படும்படியான appஐ டவுன்லோடு செய்திருந்தால், உடனடியாக மொபைலை flight modeல் போடும்படியும், anti-virus scan மூலம் அனைத்தும் பாதுகாப்பாக உள்ளது என்பதை உறுதி செய்த பிறகும், தங்களது மொபைலை பயன்படுத்தலாம் என்று காவல்துறை அறிவுறுத்தியது.