வரும் 25-ஆம் தேதி South Bridge ரோட்டில் அமைந்துள்ள ஸ்ரீ மாரியம்மன் கோயிலில் தீமிதி திருவிழா ஆரம்பமாக உள்ளது. நவம்பர் 5-ஆம் தேதி வரை நடைபெறும்.
அங்கப்பிரதட்சணம், பால்குடம்,கும்பிடுதண்டம்,தீமிதி, பூக்குழி வலம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெறும். அதில் பங்கேற்கும் பக்தர்கள் கட்டாயமாக ஆன்லைனில் பதிவு செய்ய வேண்டும்.
பக்தர்கள் நவம்பர் 4-ஆம் தேதி வரை ஆன்லைனில் பதிவு செய்யலாம்.
செப்டம்பர் 21-ஆம் தேதி (நேற்று) இந்து அறக்கட்டளை வாரியம் அறிக்கை வெளியிட்டது.
இது குறித்த தகவல்கள் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.
ஆன்லைனில் மட்டுமே பதிவு செய்ய முடியும். நேரடியாக சென்று பதிவு செய்ய முடியாது.
பக்தர்களுக்கு வாரியம் ஆலோசனையும் கூறியுள்ளது.
விவரங்களைச் சரிபார்த்துபிறகு பதிவு செய்யுமாறு கூறியது.பக்தர்கள் பதிவு செய்த பின் பதிவின்போது குறிப்பிடப்பட்ட நேரத்தை மாற்ற இயலாது.
அது ஆன்லைன் மூலம் பதிவு செய்து கட்டணத்தை செலுத்திய பின்னர் மட்டுமே உறுதி செய்யப்படும்.
பக்தர்களுக்கு பதிவு செய்தபின் குறுஞ்செய்தி அல்லது மின்னஞ்சல் அனுப்பப்படும் என்று கூறியது.
தங்களுக்கு வந்த குறுஞ்செய்தி அல்லது மின்னஞ்சலை காட்டிவிட்டு பக்தர்கள் தங்கள் நேர்த்தி கடனை செலுத்தலாம் என்று தெரிவித்தது.