வானிலை அதிகாரிகள் சீனாவின் பல பகுதிகளில் பலத்த காற்று மற்றும் கனமழை எச்சரிக்கைகளை விடுத்துள்ளனர்.
Jiangsu-வின் கிழக்கு மாகாணத்தில் ஏற்பட்ட சூறாவளியால் 10 பேர் இறந்ததாகவும், பேரழிவு ஏற்பட்டதாகவும் கூறினர்.
Jiangsu-வில் மஞ்சள் கடல் அருகே உள்ள கடலோர பகுதிகளில் பலத்த காற்று வீசி வருகிறது.
சமீபத்தில் நடந்த பேரழிவால் அதிகாரிகள் அனைவரும் விழிப்புடன் செயல்படுகின்றனர்.
சிறிது நேரம் மட்டுமே நீடித்த சூறாவளி மிகவும் வலுவாக இருந்ததாக கூறினர்.
இதன் காரணமாக Suqian-ன் தெருக்களில் கவிழ்ந்த கார்கள், கீழே விழுந்த மின் கம்பிகள் மற்றும் குப்பைகள் சிதறிக்கிடந்தன.
Suqian-ன் மக்கள் அதிகம் உள்ள பகுதிகளில் திடீரென்று தாக்கிய சூறாவளியால் 5 பேர் இறந்தனர் மற்றும் 4 பேர் படுகாயம் அடைந்தனர்.
சுமார் 1000 க்கும் மேற்பட்ட வீடுகள் சேதம் அடைந்ததாகவும், ஏக்கர் கணக்கில் பயிர்கள் நாசம் அடைந்ததாகவும் தெரிவித்தனர்.
இந்த சூறாவளி Yancheng-யும் விட்டு வைக்கவில்லை. இப்பகுதியிலும் 5 பேர் இறந்ததாகவும், 4 பேர் படுகாயம் அடைந்ததாகவும் தெரிவித்தனர்.
சீனாவின் தென்கிழக்கு பகுதிகளில் ஏற்பட்ட அடைமழை காரணமாக நிலச்சரிவுகள் ஏற்பட்டது மற்றும் பலர் உயிரிழந்துள்ளனர்.