உலகின் நீல மண்டலங்கள் பட்டியலில் இடத்தைப் பிடித்த சிங்கப்பூர்…..

உலகின் ஆறாவது நீல மண்டலமாக சிங்கப்பூர் பெயரிடப்பட்டுள்ளது.

எழுத்தாளர், Dan Buettner இதற்கு முன் ஐந்து நீல மண்டலங்களை அடையாளம் கண்டார்.

அவை Okinawa, Ikaria, Sardinia, Nicoya மற்றும் Loma Linda ஆகிய பகுதிகள் ஆகும்.

ஆகஸ்ட் மாதம் இந்த பட்டியலில் சிங்கப்பூரை சேர்த்தார்.

இவர் 20 வருடங்களாக நீல மண்டலங்களை படிப்பதில் செலவிட்டார்.

நீல மண்டலங்கள், நீண்ட காலம் வாழ்வதற்கான இடங்கள் என்று கூறுகிறார்.

இவர் நவீன கால அளவீடு மூலம் நீண்ட காலம் வாழும் ஆரோக்கியமான மக்கள் தொகையை உருவாக்கிய ஒரு நாட்டை அங்கீகரிக்கும் பொருட்டு அவ்வாறு பெயரிட்டதாக கூறினார்.

சிங்கப்பூரில், 100 மற்றும் அதற்கு மேற்பட்ட வயது உடையவர்களின் எண்ணிக்கை, 2010 ல் 700 ஆக இருந்தது. அது 2020 ல் 1500 ஆக இரட்டிப்பானது.

பொதுவாக உணவு பழக்க வழக்கங்கள் மற்றும் வாழ்க்கை முறை ஆகியவற்றை பொறுத்து நீல மண்டலங்களை பட்டியலிட்டார்.

இருப்பினும் சில சிங்கப்பூரர்கள், சிங்கப்பூரை நீல மண்டலமாக அறிவித்ததை ஏற்க மறுத்தனர்.

சிங்கப்பூரை சுற்றியுள்ள ஆசிய நாடுகளுடன் ஒப்பிட்டுப் பார்த்தால், சிங்கப்பூர் சிறப்பாக செயல்படுகின்றது என்று அவர் கூறினார்.

மேலும் UN-ன், 2023 World Happiness ரிப்போர்ட்டில், சிங்கப்பூர் 25வது இடத்தில் உள்ளது என்றும், ஜப்பான், கொரியா, சீனா ஆகிய நாடுகள் முறையே 47, 57 மற்றும் 64 வது இடங்களை பிடித்துள்ளன என்றும், சிங்கப்பூரின் அண்டை நாடான மலேசியா, 55 வது இடத்தில் உள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

சுகாதார பேராசிரியர், ஆங் என்பவர், சிங்கப்பூர் நீல மண்டலமாக அறிவிக்கப்பட்டதன் சிறப்பு என்னவென்றால், மக்கள் மேலும் சிறப்பாக பணியாற்றவும், நீலமண்டலம் அல்லாத பிற பகுதிகளை மேம்படுத்துவதற்கான முயற்சிகளில் கவனம் செலுத்தவும் இது ஒரு உந்துதலாக இருக்கும் என்றும் தெரிவித்தார்.