நேற்று காலை 9.14 மணிக்கு நியூசிலாந்தின் தெற்கு தீவை உலுக்கிய நிலநடுக்கம்!
ரிக்டர் அளவில் 6.2 ஆக பதிவானது. சுமார் 15,000 பேர் இந்த நிலநடுக்கத்தை உணர்ந்ததாக தெரிவித்தனர்.
இதுவரை அங்கு ஏற்பட்ட நிலநடுக்கங்களை விட இது மிகவும் வலுவாக இருந்ததாக அவர்கள் கூறினர்.
முதற்கட்ட அறிக்கையில், காயங்களோ அல்லது குறிப்பிடத்தக்க சேதமோ ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டது.
2011 இல் 6.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்ட இடத்திற்கு அருகில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக தெரிவித்தனர்.
2011 இல் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சுமார் 185 பேர் இறந்ததாகவும், பெரும் சேதம் ஏற்பட்டதாகவும் கூறினர்.
நியூசிலாந்து பூகம்பம் மற்றும் எரிமலை நடவடிக்கைகளுக்கு பெயர் பெற்ற புவியியல் பகுதி ஆகும். Tectonic plates மோதுவதால், இங்கு அடிக்கடி பூகம்பம் ஏற்படும் என ஆய்வுகள் கூறுகின்றன.