சிங்கப்பூரில் தென்பட்ட புதிய குரங்கு….. ஒரு சில நாடுகளில் இருக்கும்…. தற்போது சிங்கப்பூரிலும்…..

புருணை, இந்தோனேஷியா, மலேசியா ஆகிய நாடுகளில் Silvered langur குரங்குகள் காணப்படும். தற்போது சிங்கப்பூரில் இந்த வகை குரங்குகள் காணப்பட்டுள்ளது.

சிங்கப்பூரில் இந்த வகை குரங்குகள் இருந்ததில்லை.

அவைகள் 46 cm முதல் 56 cm வரை வளரும்.

அவைகளின் கண்கள் சிவப்பு நிறத்துடனும், உடல் சாம்பல்-வெள்ளை நிறத்துடன் இருக்கும்.

இந்த மாதம் 5-ஆம் தேதி Clementi Woods பார்க்கில் Silvered Langur குரங்கு காணப்பட்டது.

அதை கண்ட நபர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஓர் பதிவைப் பதிவிட்டுள்ளார்.

”என்னவோ உருமுவது போன்று சத்தம் கேட்டது. நான் முதலில் அது காட்டுபன்றி என்று நினைத்தேன். மரத்தில் Silvered Langur குரங்கு இருந்தது” என்று பதிவிட்டார்.

அந்த வகை குரங்கின் வால் அதன் உடலை விட நீளமாக வளரும்.

மனிதர்களிடம் அவை நெருங்காது. அவைகளிடம் பொதுமக்கள் நெருங்க வேண்டாம் என்று கேட்டு கொள்ளப்பட்டது.

அந்த வகை குரங்குகளை கழகம் கண்காணிக்க உள்ளதாகவும் கூறியது.