பிளாங்க்டன் வருடத்திற்கு ஒன்று அல்லது இரண்டு முறை பூக்கும் என்றும், இரண்டு முதல் மூன்று நாட்கள் மட்டுமே நீடிக்கும் என்றும் நிபுணர்கள் கூறுகின்றனர்.
ஆனால் வழக்கத்திற்கு மாறாக தாய்லாந்து வளைகுடாவில் உள்ள சில பகுதிகளில், சாதாரண அளவை விட 10 மடங்கு அதிகமான பிளாங்க்டன் இருப்பதால், தண்ணீரை பச்சை நிறமாக மாற்றி உள்ளது.
இவை சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவுக்கும் நச்சுகளை உருவாக்கலாம் என்றும், தண்ணீரில் ஆக்ஸிஜனை குறைப்பதன் மூலமும், சூரிய ஒளியை தடுப்பதன் மூலமும், கடல் வாழ் உயிரினங்களை கொல்லும் அபாயம் உள்ளது என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.
பிளாங்க்டன் அதிகரித்ததற்கான காரணம் தெளிவாக இல்லை என்றாலும், மாசுபாடு மற்றும் காலநிலை மாற்றத்தால் ஏற்படும் கடுமையான வெப்பம், இதன் வளர்ச்சிக்கு காரணமாக இருப்பதாக விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.
பிளாங்க்டன் அதிகரிப்பு, அங்குள்ள மீனவர்களின் வாழ்வாதாரத்தை அச்சுறுத்துகிறது.
El Nino, வறட்சி மற்றும் அதிக கடல் வெப்பநிலை ஏற்படுத்துகிறது என்று கடல் சார்ந்த விஞ்ஞானி கூறினார்.
இதன் காரணமாக, டெக்ஸாஸில் உள்ள கடற்கரைகளில் மீன்கள் இறந்து கரை ஒதுங்கியதாக நிபுணர்கள் தெரிவித்தனர்.
நீர் வளங்கள், நீர் கழிவுகள் மற்றும் நமது வாழ்க்கை முறையை சரி செய்யவில்லை என்றால் நிலைமை மோசமாகிவிடும் என்று கடல்சார் விஞ்ஞானி எச்சரித்தார்.