லிபியா நாட்டில் கடந்த வாரம் ஏற்பட்ட வெள்ளத்தால் 3,922 பேர் உயிரிழந்துள்ளதாக பதிவு செய்யப்பட்டுள்ளது.5000 க்கு அதிகமானோர் உயிரிழந்திருக்கக்கூடும் என்று கூறப்படுகிறது.
இடிபாடுகளில் சிக்கிய ஆயிரக்கணக்கான இறந்த மற்றும் காணாமல் போனவர்களை அவர்களது உறவினர்கள் தேடி வருகின்றனர்.
இரவு நேரத்தில் ஏற்பட்ட இந்த வெள்ள பெருக்கத்தால், அடுக்குமாடி குடியிருப்புகளில் உறங்கிக் கொண்டிருந்த மக்கள் கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டனர்.
தனது தந்தை வழி சொந்தங்களான 50 பேரை இழந்ததாக ஒருவரும், தனது மனைவி மற்றும் பிள்ளைகளை தேடிக் கொண்டிருப்பதாக ஒருவரும், மற்றொருவர் தனது குடும்பத்தை சேர்ந்த 15 பேர் மற்றும் ஒன்பது நண்பர்களை இழந்ததாகவும் கதறினார்.
இடிபாடுகளுக்கு அடியில் மற்றும் தண்ணீரில் சிக்கி இருக்கும் சடலங்களால் நோய் பரவும் அபாயம் இருப்பதாக டெர்னாவின் மேயர் கூறினார்.
Egypt, Tunisia, the United Arab Emirates, Turkey மற்றும் Qatar-இலிருந்து மீட்பு குழுக்கள் வந்துள்ளன.
கடற்கரையில் உடைகள், பொம்மைகள், காலணிகள் மற்றும் பிற உடமைகள் சிதறி கிடந்தன.