Haikui சூறாவளியால் கடந்த வாரம் தெற்கு சீனாவில் கனமழை பெய்தது. அதனால் ஹாங்காங் மற்றும் பிற பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
Guangdong பகுதியில் உள்ள Maoming நகரில் முதலைப்பண்ணை ஒன்று உள்ளது. இப்பகுதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அங்கிருந்த முதலை பண்ணையில் இருந்து 70 க்கும் மேற்பட்ட முதலைகள் வெளியேறியதாக தெரிவித்தனர்.
சீனாவில் முதலைகள் அவற்றின் தோல் மற்றும் இறைச்சிக்காக வளர்க்கப்படுகிறது.இது பாரம்பரிய மருத்துவத்தில் ஒரு சில சமயத்தில் பயன்படுத்தப்படுகிறது என்றும் கூறினர்.
மீட்பு படகுகளில் சென்று வெள்ளத்தில் மூழ்கிய வயல்களில், முதலைகளை தேடி வரும் நடவடிக்கை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
எத்தனை முதலைகள் பிடிபட்டது அல்லது மொத்தம் எத்தனை முதலைகள் வெளியேறின போன்ற எந்த கேள்விகளுக்கும் சரியான பதில் தெரிவிக்கப்படவில்லை.
இது ஒரு புறம் இருக்க, மற்றொரு புறம் சமூக ஊடகங்களில் முதலைகள் சுதந்திரமாக உலாவி வருவதை குறித்து பல்வேறு கருத்துக்கள் தெரிவித்தும், கேலி செய்தும் வருகின்றனர்.