2020 ஆம் ஆண்டின் இரண்டாவது காலாண்டுக்கு பிறகு முதல்முறையாக, சிங்கப்பூரர்கள் மற்றும் நிரந்தர குடியிருப்பாளர்களின் பணிபுரியும் எண்ணிக்கை குறைந்துள்ளதாக மனிதவள அமைச்சகம் தெரிவித்தது.
சமுதாயம், சமூகம், தனிமனித சேவைகள், நிதி மற்றும் காப்பீட்டு சேவைகள் போன்ற துறைகளில் வளர்ச்சி இருந்த போதிலும், குடியிருப்பாளர்களின் வேலை எண்ணிக்கை 1200 ஆக குறைந்துள்ளது என்று அது தெரிவித்தது.
பருவகால காரணங்களால் retail trade, உணவு மற்றும் குளிர் பானம் சேவைகளில் வேலை செய்பவர்களின் எண்ணிக்கை குறைந்தது என்றும் தெரிவித்தது.
குடியிருப்பாளர்களின் பணிபுரியும் எண்ணிக்கை குறையும் என எதிர்பார்க்கவில்லை என்றும், வரும் மாதங்களில் வேலை விகிதம் உயரும் என்றும் மனிதவள அமைச்சகம் தெரிவித்தது.