சிங்கப்பூரில் இந்த ஆண்டு மோசடி குற்றங்களின் எண்ணிக்கை கூடியுள்ளது. அதன் சதவீதம் 64.5 விழுக்காடாக உயர்ந்துள்ளது.
இந்த ஆண்டின் முதல் பாதியில் இதுவரை 330 மில்லியனுக்கும் அதிகமான தொகை இழக்கப்பட்டுள்ளதாக காவல்துறை கூறியது.
பாதிக்கப்பட்டவர்களின் பாதிக்கும் அதிகமான சுமார் 2000 வெள்ளிக்கும் அதிகமாக இழந்துள்ளதாக காவல்துறை கூறியது.
மிக சுலபமாக மோசடி கும்பலிடம் ஏமாந்தவர்கள் 20 க்கும் 39 வயதுக்கும் இடைப்பட்டவர்கள்.
குறிப்பாக ஆன்லைன் மோசடிகள்,மின்-வர்த்தக மோசடிகள், வேலை மோசடிகள் உள்ளிட்ட மோசடிகளில் மிக எளிதாக பாதிப்புக்கு ஆளானதாக காவல்துறை கூறியது.