அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட கோர தீ விபத்து…..பிணவறையில் தங்கள் குடும்பத்தை சேர்ந்தவர்கள் உள்ளார்களா? என தேடி திரியும் அவலம்……

வியட்நாம் தலைநகரமான Hanoi-ல் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடத்தில் ஏற்பட்ட கோர தீ விபத்தில், மூன்று குழந்தைகள் உட்பட, 56 பேர் இறந்ததாகவும், 37 பேர் காயமடைந்ததாகவும், காவல்துறையினர் கூறினர்.

இந்த தீ விபத்தில் சிலர், தன் குடும்பமே தீக்கிரையானது என்றும், ஒருவர் தன் மகளை இழந்ததாகவும் கதறினர்.

ராணுவத்திற்கு சொந்தமான மருத்துவமனையில் உள்ள பிணவறையை சுற்றி, உறவினர்கள் தங்கள் குடும்பத்தை சேர்ந்தவர்கள் உள்ளார்களா என தேடிக் கொண்டிருக்கின்றனர்.

இந்த கட்டிடத்தில் சுமார் 150 பேர் வசித்து வந்ததாகவும், இதில் பலர், வேறு பகுதிகளிலிருந்து வேலைக்காகவும், படிப்பதற்காகவும் வந்தனர் என்றும் கூறப்பட்டது.

இந்த கட்டிடத்தில் இருந்து வெளியேற ஒரே ஒரு வழி மட்டும்தான் இருக்கிறது என்றும், அவசர காலத்தில் பயன்படுத்த ஏணி கூட இல்லை என்றும், தீயணைப்பு சாதனங்கள் இல்லாதது குறித்தும், பலமுறை புகார் அளித்ததாக அங்கு வசிக்கும் ஒருவர் கூறினார்.

இந்த விபத்தில் பெரியவர்களை இழந்த ஒவ்வொரு குடும்பத்திற்கும், 1500 அமெரிக்க டாலர்களை வழங்குவதாகவும், குழந்தைகளை இழந்தவர்களுக்கு இழப்பீடு வழங்குவதாகவும் Hanoi அரசாங்கம் அறிவித்தது.