சிங்கப்பூரில் உள்ள சமூக சேவை நிறுவனங்கள், தற்கொலை செய்து கொள்ள நினைப்பவர்களிடம் இருந்து அதிகமான அழைப்புகளும், குறுஞ்செய்திகளும் வருவதாக கூறின.
கடந்த ஆண்டு மட்டும் 476 தற்கொலை வழக்குகள் பதிவானது என்றும், 20 ஆண்டுகளில் அதுவே அதிகம் என்றும் கூறியது.
இதில் பெரும்பாலும் இளைஞர்கள் மற்றும் முதியவர்கள் அடங்குவர். 10 முதல் 29 வயதுக்குட்பட்டவர்கள் அதிகமாக தற்கொலை செய்து கொண்டதாக, தற்கொலை தடுப்பு நிறுவனமான, Samaritans of Singapore தெரிவித்தது.
கடந்த ஆண்டு, தற்கொலை செய்து கொள்ளும் எண்ணம் உள்ளவர்களிடமிருந்து 57,000 அழைப்புகள் மற்றும் whatsapp வழியாக 22,000 குறுஞ்செய்திகளை பெற்றதாக Samaritans of Singapore கூறியது.
இந்த அழைப்புகள் அதிகரித்து வருவதால், இதில் பணியாற்ற தன்னார்வலர்களை நாடுகின்றனர். அவர்களுக்கு தேவையான பயிற்சிகளை அளிக்கவும் தயாராக உள்ளதாக தெரிவித்தனர்.
இந்த அமைப்பு, கடந்த ஆண்டில் 2000 பேருக்கு பயிற்சி அளித்ததாக கூறியது.மற்றும் ஒரு சமூக சேவை நிறுவனமான Touch, இளைஞர்களுக்கான பல திட்டங்களை கொண்டுள்ளது.
இந்த நிறுவனம் மனநலத்தை மேம்படுத்துவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்துகிறது.இது பொது மக்களுக்கான ஹெல்ப்லைனையும் கொண்டுள்ளது.
இது சமூக சேவகர்கள் மற்றும் ஆலோசகர்களால், உணர்ச்சிபூர்வமான ஆதரவு மற்றும் ஆலோசனைகளை வழங்க உதவுகிறது.
இது போன்ற தற்கொலை சம்பவங்களை தடுக்க, நிறுவனங்கள் மட்டும் போதாது. அனைவரின் பங்களிப்பும் இதில் இருக்க வேண்டும்.