லிபியா நாட்டில், டேனியல் புயலால் கடும் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. வெள்ளம் காரணமாக பல கட்டிடங்கள் இடிந்து விழுந்தன.
அந்நாட்டின் பிரதம மந்திரி, Oussama Hamad, டெர்னா என்ற பகுதியில் மட்டும் 2000-க்கும் மேற்பட்டோர் இறந்ததாகவும், ஆயிரக்கணக்கான மக்கள் காணவில்லை என்றும் கூறினார். ஆனால் இந்த புள்ளி விவரங்கள் உறுதிப்படுத்தப்படவில்லை.
நூற்றுக்கணக்கான மக்கள் சில பகுதிகளில் சிக்கி இருப்பதாகவும், அவர்களை மீட்கும் பணியில் ராணுவத்தினர் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
Hamad, மீட்புக் குழுவின் தலைவர் மற்றும் அமைச்சர்கள் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் சென்று பார்த்தனர்.
சுமார், ஒரு லட்சம் மக்கள் வசிக்கும் டெர்னாவில், நான்கு முக்கிய பாலங்கள் மற்றும் இரண்டு அணைகள் இடிந்து விழுந்தன. இதனால் அப்பகுதியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது என்று தெரிவித்தனர்.
Hamad-ன் அரசாங்கம், டெர்னாவை ‘பேரழிவு பகுதியாக’ அறிவித்தது. லிபியாவின் மேற்கத்திய அரசாங்கம், இந்த பேரழிவை எதிர்கொள்ள, லிபியா மக்களின் ஒற்றுமையை வலியுறுத்தியது.
கிரீஸ், துருக்கி மற்றும் பல்கேரியாவிலும் கடும் பாதிப்பை ஏற்படுத்தியது, இந்த டேனியல் புயல்.