சிங்கப்பூரில் Eshan Tharaka Koottage எனும் 30 வயதுடைய நபர் தன் மனைவியை கொன்று விட்டதாக மரேன் பரேட் அருகில் உள்ள காவல் நிலையத்திற்கு சென்று அதிகாரிகளிடம் தகவல் அளித்தார்.இந்த சம்பவம் காத்தோங்கில் உள்ள Holiday Inn Express ஹோட்டலில் நடந்தது.
சம்பவ இடத்திற்கு காவல்துறை அதிகாரிகள் சென்றனர். அங்கே 32 வயதுடைய பெண் வெட்டு காயங்களுடன் உடல் அசைவின்றி கிடந்தார்.
அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்து விட்டதாக காவல்துறை கூறியது.
ஹோட்டல் ரூமில் கத்தி ஒன்று கைப்பற்றப்பட்டது.
தன் மனைவியை கொன்றதாக அவர்மீது குற்றம் சாட்டப்பட்டது.
அவரை ஒரு வாரம் தடுப்பு காவலில் வைப்பதற்கு அரசு தரப்பு வழக்கறிஞர்கள் விண்ணப்பித்துள்ளார்கள்.
நீதிமன்றத்தில் இந்த மாதம் 18-ஆம் தேதி மீண்டும் ஆஜர் படுத்தப்படுவார்.
அவரின் குற்றம் நிரூபிக்கப்பட்டால் மரண தண்டனை விதிக்கக்கூடும்.