தீக்கு இரையான தீவு…..பலியான உயிர்கள்…..66 பேர் மாயம்…..

ஆகஸ்ட் மாதம், 8ம் தேதி அமெரிக்காவின் ஹவாய் மாநிலத்தில் உள்ள மாவி தீவில் ஏற்பட்ட காட்டு தீயில் 115 பேர் இறந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது.

காட்டு தீ ஏற்பட்டு ஒரு மாதம் ஆன நிலையில் 66 பேரை இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை.

பாதிக்கப்பட்டவர்களில், 60 பேரை மட்டுமே அடையாளம் காண முடிந்தது என்று காவல்துறை தெரிவித்துள்ளது.

சிலர் தீயில் எரிந்து சாம்பலாகி இருக்கக்கூடும் என்றும், இறுதி இறப்பு எண்ணிக்கை உறுதியற்றது என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

இறந்தவர்களுக்கு இறப்பு சான்றிதழ்கள் வழங்க பல மாதங்கள் ஆகலாம் என்று தெரிவிக்கப்பட்டது.

தீ விபத்தில் இருந்து தப்பிய 6,000-க்கும் மேற்பட்டோர் ஹோட்டல்களில் தங்கி இருப்பதாக மாநில கவர்னர் கூறினார்.

மாவி மக்கள் மற்றும் வணிக உரிமையாளர்கள் விரைவில் பாதிக்கப்பட்ட பகுதிக்குள் செல்ல அனுமதிக்கப்படுவார்கள் என்று அவர் தெரிவித்தார்.

மேலும், சாம்பல் மிகவும் நச்சுத்தன்மை வாய்ந்தது என்றும், மக்கள் கவனமாக இருக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.

The US Environmental Protection Agency மற்றும் the US Army Corps of Engineers, நச்சுத்தன்மை வாய்ந்த குப்பைகளை முழுவதுமாக அகற்ற ஒரு வருடம் ஆகும் என்றும், சுமார் ஒரு பில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவாகும் என்றும் அவர் தெரிவித்தார்.

அதுவரை, வீடுகளை இழந்தவர்கள் ஹோட்டல் மற்றும் வாடகை வீடுகளில் தங்க அரசாங்கம் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

The Federal Emergency Management Agency, மக்களுக்கு வீட்டு மானியங்கள் மற்றும் வாடகை உதவிகளை வழங்கவிருக்கிறது என்றும் கூறினார்.