நாட்டையே உலுக்கிய நிலநடுக்கம்……296 பேர் பலி….

மொரோக்கோவில் 6.8 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் நாட்டையே உலுக்கியுள்ளது. இந்த நிலநடுக்கத்தில் 296 பேர் பலியாகி உள்ளதாக அந்நாட்டின் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்த நிலநடுக்கம் மாராகேஷீக்கு தென்மேற்கு 71கி.மீ (44 மைல்) தொலைவில் மையம் கொண்டிருந்ததாக அமெரிக்கா புவியியல் ஆய்வு மையம் தெரிவித்தது.

இந்த நிலநடுக்கத்தில் பல கட்டிடங்கள் சேதம் அடைந்துள்ளது. கட்டிட இடுப்பாடுகளில் பலர் சிக்கி இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

காயம் அடைந்தவர்கள் மராகேஷீல் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இதனால் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க கூடும் என்று அஞ்சப்படுகிறது.

நிலநடுக்கத்தின் அதிர்வு Rabat, Casablanca, Essaouira உள்ளிட்ட இடங்களில் உணரப்பட்டது.

மொரோக்கோ இதுவரை கண்டிராத மிகப்பெரிய நிலநடுக்கம் இதுவே என்று உள்ளூர் ஊடகம் தெரிவித்தது.

நிலநடுக்கத்தின் அதிர்வானது அல்ஜீரியாவிலும் உணரப்பட்டது.

அந்நாட்டின் கொடுமை தற்காப்பு படை அங்கு சேதம் ஏதும் ஏற்படவில்லை என்று தெரிவித்தது.