உக்ரைனுக்கு ஆம்புலன்ஸ்களை அனுப்ப முடிவு செய்துள்ள சிங்கப்பூர்…..

உக்ரைனின் வேண்டுகோளுக்கிணங்க மனிதாபிமான அடிப்படையில் சிங்கப்பூர், 22 அவசர ஊர்திகளை உக்ரைனுக்கு அனுப்ப முடிவு செய்துள்ளதாக வெளியுறவு அமைச்சகம் தெரிவித்தது.

சிங்கப்பூர், கடந்த ஆண்டு ஜூன் மாதம் உக்ரைனுக்கு 9 ஆம்புலன்ஸ்கள், இரண்டு fire engine-கள், தீயணைப்பு பாதுகாப்பு சாதனங்கள், மீட்புக்கருவிகள், கன்னிவெடியை கண்டறியும் கருவிகள் மற்றும் மருத்துவப் பொருட்கள் ஆகியவற்றை கொடுத்து உதவியது.

கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் சிங்கப்பூர் செஞ்சிலுவை சங்கமும், உக்ரைன் அகதிகளுக்கு மருத்துவம் மற்றும் முதலுதவி பொருட்கள், மருத்துவக் கருவிகள்,அரிய நோய்களுக்கான மருந்து, சுகாதார பொருட்கள், ஜெனரேட்டர்கள், தண்ணீர், உட்பட 3.66 மில்லியன் சிங்கப்பூர் டாலர் மதிப்பிலான நிவாரண பொருட்களை வழங்கி இருக்கிறது.

அதுமட்டுமல்லாமல், டிசம்பர் 2022-ல் உறைபனி மற்றும் அதிர்வுகளை தாங்கும் 10 modular வீடுகளை கட்டுவதற்கும் ஆதரவளித்தது.