சிங்கப்பூரில் அனைத்து பாலர் பள்ளிகளிலும் கண்காணிப்பு கேமராக்களை கட்டாயமாக பொருத்த வேண்டும்.
அண்மையில் கிண்டர்லண்ட் பள்ளியில் ஆசிரியர் குழந்தையை துன்புறுத்தும் காட்சிகள் சமூக ஊடகங்களில் பரவியது. இதனால் பெற்றோர்களிடம் அதிர்ப்தி ஏற்பட்டது.பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.இது போன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் இருக்க இந்த புதிய நடவடிக்கையை கட்டாயப்படுத்தி உள்ளது.
இச்சம்பவத்தால் பாலர் பள்ளிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும் என்ற நடவடிக்கை எடுக்கப்பட்டதாக கூறப்பட்டது.
இந்நடவடிக்கை மிகுந்த பலன் கொடுக்கும் என்று CNA- விடம் ஆசிரியர்கள் கூறுகிறார்கள். ஆசிரியர்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.
இதனால் தங்களுக்கு மன நிம்மதி அளிக்கும் என்று பெற்றோர்களும் தெரிவித்தன.
சிங்கப்பூரில் உள்ள அனைத்து பாலர் பள்ளிகளிலும் அடுத்த ஆண்டு ஜூலை மாதத்திலிருந்து கண்காணிப்பு கேமரா இருப்பது கட்டாயம்.
பள்ளிகளில் ஏதேனும் சம்பவங்கள் நடந்தால், அதன் மூலம் நம்பகத் தன்மையான ஆதாரங்கள் இருக்கும் என்று குழந்தை பருவ மேம்பாட்டு அமைப்பு கூறியது.