தெம்பனீஸ் ஸ்ட்ரீட் 22-இல் ஒருவரைக் காயப்படுத்தி அவரிடம் இருந்த பொருட்கள், பணம் கொள்ளையடிக்கப்பட்டது.
இச்சம்பவத்தில் இரண்டு பேர் ஈடுபட்டுள்ளனர்.பாதிக்கப்பட்டவரிடம் இருந்து பணம், மொபைல் போன் பறிக்கப்பட்டது.
இச்சம்பவம் குறித்து செப்டம்பர்-6 ஆம் தேதி பின்னிரவு ஒரு மணியளவில் காவல்துறைக்கு புகார் கிடைத்தது.
இந்த கொள்ளை சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
காவல்துறை அருகில் இருந்த சிசிடிவி கேமரா வைத்து விசாரணை தொடங்கியது.அதில் பதிவான காட்சிகளை கொண்டு அவர்களை அடையாளம் கண்டனர்.
அதன் அடிப்படையில் இருவர் கைது செய்யப்பட்டனர். சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.
புகார் கிடைத்த 13 மணி நேரத்தில் அவர்களை காவல்துறை கைது செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.
அவர்களிடம் இருந்து சுமார் 630 வெள்ளி பணமும்,மொபைல் போனும் கைப்பற்றப்பட்டன.
அவர்களின் குற்றம் நிரூபிக்கப்பட்டால் 5 லிருந்து 20 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கக்கூடும்.அதோடு 12 பிரம்படிகளும் தண்டனையாக விதிக்கக்கூடும்.