சிங்கப்பூரில் டாக்டர் ஒருவருக்கு தற்காலிகமாக தடை……பணி நீக்கம்…..

Access Medical Clinics group-ன் இயக்குனரான Dr. Lim Yong Chin என்பவர் மீது பாலியல் குற்றம் மற்றும் தேசிய சுகாதார பராமரிப்பு குழுக்களை ஏமாற்றியது போன்ற பல்வேறு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.

எனவே Ministry of Health, MediSave மற்றும் MediShield Life Scheme-களிலிருந்து அவரது பெயரை நீக்கியது.

மேலும் அவர் நோயாளிகள் சார்பாக சமூகநல உதவித் திட்டம்(CHAS), MediSave மற்றும் MediShield Life கோரிக்கைகளை வைக்கவும் தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ளது.

Singapore Medical Council-ஆல் வழங்கப்பட்ட சான்றிதழ் செல்லுபடியாகும் வரை அவர் சிகிச்சை அளிக்கலாம் என்று Ministry of Health கூறியது.

மேலும் அவரது தற்காலிக பணி நீக்கம், செப்டம்பர் 19 முதல் தொடங்கும் என்றும், அவர் மீதான மோசடி குற்றங்கள் தொடர்பான வழக்கு முடியும் வரை பணிநீக்கம் தொடரும் என்றும் தெரிவித்தது.

மருத்துவர்கள், Singapore Medical Council-ன் நெறிமுறைகளை கடைபிடிக்குமாறு, Ministry of Health கேட்டுக்கொண்டது.