சமூக ஊடகங்கள் மற்றும் Android Mobile app ‘Mooncake’ மோசடிகளில் குறைந்தது 27 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த மோசடியில் ஆகஸ்ட் மாதம் ஏற்பட்ட மொத்த இழப்புகள் குறைந்தபட்சம் $3,25,000 என சிங்கப்பூர் காவல்துறை கூறியது.
பாதிக்கப்பட்டவர்கள் Facebook மற்றும் Instagram-ல் Mooncake விற்பனைக்கான விளம்பரங்களின் மூலம் ஈர்க்கப்படுவார்கள். பின்னர் மோசடி செய்பவர்கள் அவர்களை whatsapp மூலம் தொடர்பு கொண்டு பணம் செலுத்தும் இணைப்புக்குள் அனுப்பி Android Package Kit (APK) file-ஐ டவுன்லோட் செய்யுமாறு கூறுவார்கள். இந்த file-களில் Android OS-க்கான malware இருக்கும்.
சில சமயங்களில் பாதிக்கப்பட்டவர்கள், Mooncake ஐ பெற PayNow அல்லது bank transfer செய்ய அறிவுறுத்தப்படுவார்கள். Production அல்லது ஆள் பற்றாக்குறை காரணமாக ஆர்டர் cancel செய்யப்பட வேண்டும் என்றும், பணத்தை திரும்ப பெற APK file-ஐ download மற்றும் install செய்ய வேண்டும் என்றும் scammers கூறிவார்கள்.
பிறகு பாதிக்கப்பட்டவர்கள், தங்களது பேங்க் அக்கவுண்டில் இருந்து unauthorised transactions நடைபெற்றதை அறிவார்கள்.
சந்தேகத்திற்குரிய அல்லது third party app மூலம் app-களை டவுன்லோட் செய்வதால் ஏற்படும் ஆபத்து குறித்து பொதுமக்களுக்கு காவல்துறை அறிவித்தது.
ஒருவேளை, சந்தேகம்படும்படியான app-களை download மற்றும் install செய்திருந்தால், phoneஐ உடனடியாக flight mode-ல் மாற்றி Wi-Fi-ஐ switch off செய்த பிறகு, anti virus scan-ஐ இயக்கவும்.
பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் bank account, Singpass மற்றும் CPF ஆகியவற்றை மற்ற devices-ஐ பயன்படுத்தி unauthorised transactions நடைபெற்றதா என சரிபார்க்க வேண்டும். நடைபெற்றிருந்தால், bank officers மற்றும் காவல்துறையில் புகார் அளிக்கவும்.