38 வயதுடைய ஆண் மற்றும் 55 வயதுடைய பெண், உலக அதிசயங்களில் ஒன்றான சீனப் பெருஞ்சுவரில் சேதத்தை ஏற்படுத்திய காரணத்திற்காக போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வெளிநாட்டு படையெடுப்பாளர்களை தடுக்க சீனாவின் பேரரசர்களால் கட்டப்பட்ட, மகத்தான கட்டமைப்பின் சுவரின் ஒரு பகுதி வழியாக குறுக்கு வழியை தோண்டுவதற்கு பயன்படுத்தப்படும் இயந்திரங்களால் செய்யப்பட்ட தடங்களை பின்தொடர்ந்து அவர்கள் இருவரையும் Shanxi மாகாண காவல்துறையிடம் கையும் களவுமாக பிடிப்பட்டனர்.
விசாரணையில், பயண நேரத்தை குறைக்கும் நோக்கில், சுவரில் குறுக்கு வழியை உருவாக்குவதற்காக தோண்டும் இயந்திரத்தை பயன்படுத்தியதாக ஒப்புக்கொண்டனர்.
இவர்கள் “மிங்” காலச் சுவருக்கு மீள முடியாத சேதத்தை ஏற்படுத்தினர். இருவரும் குற்றவியல் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர். மேலும் வழக்கு தொடர்ந்து விசாரிக்கப்பட்டு வருகிறது