சிங்கப்பூரின் கடுமையான விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகள் அந்நாட்டின் தூய்மை, பாதுகாப்பு மற்றும் ஒழுங்குமுறைக்கு பங்களிக்கின்றன. சிங்கப்பூரின் சில முக்கியமான விதிகள் மற்றும் சட்டங்களை பற்றி தெரிந்து கொள்வோம்.
சிங்கப்பூரில் பொது இடங்களை சுத்தமாக வைத்திருக்க, மருத்துவரால் பரிந்துரைக்கப்படும் therapeutic gum தவிர மற்ற chewing gum விற்பனை தடைசெய்யப்பட்டுள்ளது.
சிங்கப்பூரில் குப்பை கொட்டுவதற்கு எதிரான கடுமையான சட்டங்கள் உள்ளன. சிகரெட் துண்டுகள் உட்பட, குப்பைகளை வீசினால் கடுமையான அபராதம் விதிக்கப்படும்.
பேருந்து நிறுத்தங்கள், indoor பகுதிகள் மற்றும் பொது பூங்காக்கள் உட்பட பெரும்பாலான பொது இடங்களில் புகைபிடிக்க அனுமதியில்லை. ஆனால் புகைபிடிக்க அனுமதிக்கப்பட்ட பகுதிகளில் புகைபிடிக்கலாம்.
உலகின் மிகக் கடுமையான போதைப்பொருள் சட்டங்கள் சிங்கப்பூரில் உள்ளன. சட்டத்திற்கு விரோதமான போதைப்பொருட்களை வைத்திருப்பது, கடத்துவது அல்லது உட்கொள்வது போன்ற சில குற்றங்களுக்கு மரண தண்டனை உட்பட கடுமையான தண்டனைகள் வழங்கப்படும்.
பொது சுவற்றில் எழுதுவதோ, வரைபடங்கள் வரைவதோ அல்லது சேதப்படுத்துவதோ கடுமையான குற்றம் ஆகும். மீறினால் தடியடி உள்ளிட்ட கடுமையான தண்டனை வழங்கப்படும்.
சாலைகளை Pedestrians crossings பயன்படுத்தி மட்டுமே கடக்க வேண்டும். மீறினால் அபராதம் விதிக்கப்படும்.
சிங்கப்பூரின் Changi விமான நிலையத்தில் random bag checks உட்பட கடுமையான பாதுகாப்பு நடவடிக்கைகள் உள்ளன. தடை செய்யப்பட்ட பொருட்களை வைத்திருந்தால் அபராதம் அல்லது சிறைத்தண்டனை விதிக்கப்படலாம்.
சிங்கப்பூரர்கள் சமுதாய ஒழுங்குமுறையை தீவிரமாக கடைப்பிடிப்பவர்கள். பொது போக்குவரத்து இடங்களில் ஒழுங்கான முறையில் வரிசையில் நிற்க வேண்டும். வயதானவர்கள் அல்லது கர்ப்பிணிகளுக்கு இருக்கைகளை விட்டுக்கொடுக்க வேண்டும். மற்றும் சுரங்கப்பாதையில் சாப்பிடவோ அல்லது குடிக்கவோ கூடாது.
புனித தளங்களில் பார்வையாளர்கள் dress code-ஐ பின்பற்ற வேண்டும். நாகரிகமான உடை, பொதுவாக வரவேற்கப்படுகிறது.
தேவையற்ற விளம்பரப் பொருட்களை குடியிருப்பு பகுதிகளில் விநியோகித்தால் அபராதம் விதிக்கப்படும்.
சிங்கப்பூரில் கடுமையான இரைச்சல் கட்டுப்பாடுகள் உள்ளன. அதுவும் குறிப்பாக இரவு நேரங்களில், சத்தமாக பார்ட்டிகள் அல்லது கூட்டம் கூடி சத்தம் போடுவது குற்றம்.
போதைப்பொருட்கள், ஆயுதங்கள் மற்றும் அழிந்துவரும் உயிரினங்கள் போன்ற பொருட்களின் இறக்குமதி மற்றும் ஏற்றுமதி மீதான கடுமையான கட்டுப்பாடுகள் குறித்து எச்சரிக்கையாக இருங்கள். மீறினால் சட்டரீதியான விளைவுகளை சந்திக்க நேரிடும்.
சிங்கப்பூரில் இருக்கும் போது பார்வையாளர்களும் குடியிருப்பாளர்களும் இந்த விதிகளைப் பற்றி நன்கு அறிந்திருப்பதும், அவற்றைக் கடைப்பிடிப்பதும் முக்கியம். இந்த விதிகள் நாட்டின் பாதுகாப்பு மற்றும் தூய்மைக்காக உருவாக்கப்பட்டுள்ளன.