கஷ்டபட்டு உழைப்பவர்களை இப்படியா ஏமாற்றுவது?ஊழியரின் குமுறல்…..

இங்கே ஓர் தம்பதி வயிறு நிறையும் வரை சாப்பிட்டு விட்டு பணம் கொடுக்காமல் ஊழியர்களை ஏமாற்றி சென்றுள்ளனர்.

அந்த ஆணையும், பெண்ணையும் உணவகம் தேடுகிறது.அவர்கள் பில்லை பெற்றுக் கொண்டு பணம் செலுத்தாமல் சென்றுள்ளனர்.

இந்த சம்பவம் Lao Yo Ji Fishhead Steamboat Seafood உணவகத்தில் நிகழ்ந்தது. அது Outram road சாலையில் அமைந்திருக்கும் உணவகம்.ஆகஸ்ட் 25-ஆம் தேதி அதிகாலை 4.45 மணியளவில் நிகழ்ந்தது.

ரெஸ்டாரன்ட் மூடப்படும் நேரத்தில் 40 வயதுடைய தம்பதியினர் உள்ளே வந்ததாக சென் வெய் என்ற ஊழியர் கூறினார். உணவகத்தில் மிக பிரபலமான உணவுகளை அவர்கள் ஆர்டர் செய்தனர்.

மூன்று முட்டை கீரை, ஹாங்காங் வேகவைத்த மீன், Stewed சிக்கன், ரைஸ் மற்றும் இரண்டு பானங்கள் போன்ற உணவுகளை ஆர்டர் செய்தார்கள்.அவர்கள் ஆர்டர் செய்த Turbot மீனின் எடை 1 கிலோவுக்கு மேல் இருந்தது. அதன் விலை மட்டுமே $208.

அவர்கள் கடைசி நிமிடத்தில் உணவகத்திற்குள் நுழைந்தார்கள். அவர்களுக்காக சமையல்காரர் சமைத்தார். நானும் மற்றொரு ஊழியரும் வேலை செய்தோம்.அவர்கள் உணவை சாப்பிடுவதற்கு கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் ஆனது.

அவர்களால் சாப்பிட முடியாத உணவுகளை எடுத்து செல்ல சொன்னார்கள்.மிச்சப்பட்ட உணவுகள் பேக் செய்யப்பபட்டது.அவர்களிடம் சாப்பிட்டதற்கான பில் கொடுக்கப்பட்டது. மொத்தம் $245.60.

அவர்கள் பணம் செலுத்திவிட்டார்கள் என்று நினைத்தேன். பேக் செய்த உணவுகளை எடுத்து கொண்டு சென்றனர்.அவர்கள் இருவரும் மஞ்சள் வண்டியில் புறப்பட்டு சென்றனர்.

இந்த சம்பவம் நடந்து ஒரு வாரமாகியும் அவர்கள் வரவில்லை. அதன்பின் மீடியாவை அணுகியதாக ஊழியர் கூறினார்.அவர்கள் தங்கள் பில்லை கட்டாவிட்டால் அவர்கள் மீது தனது முதலாளி நடவடிக்கையை மேற்கொள்வார் என்று கூறினார்.