சிங்கப்பூரில் கடந்த வெள்ளிக்கிழமை செப்டம்பர் 1-ஆம் தேதி அன்று பாசிர் ரிஸில் உள்ள ஒரு வீட்டில் கொள்ளை சம்பவம் குறித்து சுமார் 9 மணிக்கு காவல்துறைக்கு புகார் கிடைத்தது.இந்த சம்பவம் வாக்குபதிவு நடந்த தினத்தன்று நடந்தது.
அந்த நபர் கருப்பு நிற ஆடையும் முகமூடி தொப்பி அணிந்திருந்ததாக கூறப்படுகிறது. அவரை நான்கு பொதுமக்கள் பிடிக்க முயற்சி செய்தனர்.
ஆனால் ஜன்னல் வழியாக தப்பி சென்றார். அவரிடம் இருந்த கருப்பு பையை அவர்கள் கைப்பற்றினர். கொள்ளையடிக்க முயற்சி செய்த நபரை பிடிக்க முயன்ற நால்வருக்கு பொதுநல உணர்வு விருது வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டது
அதேபோல் பாசிர் ரிஸ் டெர்ரஸில் உள்ள வீட்டில் சுமார் 11 மணியளவில் $1,500 கொள்ளையடிக்கப்பட்டதாக மற்றொரு தகவல் கிடைத்தது.
மீட்கப்பட்ட கருப்பு பையில் பணம், ஆடைகள்,மதிப்புமிக்க பொருட்கள்,உடைகள் மற்றும் வீட்டை உடைக்க தேவையான கருவிகள் ஆகிய பொருட்கள் இருந்தன.
மற்றுமொரு கொள்ளை சம்பவம்,செப்டம்பர் 2-ஆம் தேதி வீட்டிற்குள் நுழைந்ததாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
ஆனால் அந்த வீட்டில் எந்த பொருளும் திருடப்படவில்லை.அந்த நபரின் அடையாளங்கள் கண்காணிப்பு கேமரா மூலம் கண்டுபிடிக்கப்பட்டது
அந்த நபர் நாட்டை விட்டு தப்பிக்க முடிவு செய்து சாங்கி விமான நிலையத்திற்கு சென்றுள்ளார்.அவரை காவல்துறை சாங்கி விமான நிலையத்தில் கைது செய்தது.
அவரிடம் இருந்து ரொக்கப்பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
செப்டம்பர் 4-ஆம் தேதி நீதிமன்றத்தில் அவர்மீது குற்றம்சாட்டப்பட்டது.
குற்றம் நிரூபிக்கப்பட்டால் அதிகபட்சம் 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படலாம்.