சரியாக மேற்பார்வையிட தவறியதற்காக முதல்வருக்கு எச்சரிக்கை கடிதம்….. நிறுவனத்துக்கு அபராதம்….

கிண்டர்லேண்ட் பள்ளியில் லின் மின் எனும் 33 வயதுடைய ஆசிரியர் ஒரு குழந்தையை துன்புறுத்தும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பகிரப்பட்டது. அதில் அந்த ஆசிரியர் குழந்தையை படுக்க வைத்து வாயில் தண்ணீர் ஊற்றுவது போன்ற காட்சிகள் இடம் பெற்றிருக்கும்.

சமூக ஊடகங்களில் வேகமாக பரவியது பல கருத்துகளும் எழுந்தன.

இதையடுத்து அவர் பணியிலிருந்து நீக்கப்பட்டார். அதோடு அவருக்கு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது. இனி அவர் எந்த பாலர் பள்ளியிலும் வேலைசெய்ய கூடாது என்றும் தடை விதிக்கப்பட்டது.

இச்சம்பவம் குறித்து காவல்துறை விசாரணை செய்து வருகிறது. மற்றொரு ஆசிரியர் ஓர் குழந்தையை சரியான முறையில் கையாளவில்லை என்பது குழந்தை பருவ மேம்பாட்டு அமைப்பு (ECDA) கண்டுபிடித்தது.

இந்த சம்பவங்களை ஆராய்ந்து பார்த்ததில் கிண்டர்லேண்ட் முதல்வர் தனது பணியை சரியாக மேற்கொள்ளவில்லை என்றும் அவர் மேற்பார்வையிட தவற விட்டதாகவும் அமைப்பு சுட்டிக்காட்டியது.

அதனால் அவருக்கு எச்சரிக்கை கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. இனி அவர் எந்த பாலர் பள்ளியிலும் முதல்வராக பணிபுரிய முடியாது. அதோடு கிண்டர்லேண்ட் பாலர் பள்ளியை நடத்தும் நிறுவனத்திற்கு $5000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

அதன் உரிமம் காலம் 6 மாதங்கள் முடிவதற்குள் குழந்தைகளை பராமரிப்பதில் முன்னேற்றம் இல்லை என்றால் அதன் உரிமம் புதுப்பிக்கப்படாது. இதனை குழந்தை பருவ மேம்பாட்டு அமைப்பு (ECDA) கூறியது.

மேலும் குழந்தையை துன்புறுத்திய ஆசிரியரை முன்கூட்டியே பணி நீக்கம் செய்திருக்க வேண்டும் என்று கூறியது. அவ்வாறு செய்ய தவறியதற்காக மன்னிப்பு கோரியது. அதோடு அத்தைகைய சம்பவங்கள் மீண்டும் நடந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று குழந்தை பராமரிப்பு மேம்பாட்டு அமைப்பு தெரிவித்தது.