சிங்கப்பூரில் குழந்தைகளுக்கு வழங்கப்படும் மேம்பாட்டு கணக்கு தொகை இந்த மாதம் நடுப்பகுதியில் வழங்கப்பட உள்ளது. $400 வெள்ளி வழங்கப்படும். அது ஆண்டுக்கு ஒருமுறை வழங்கப்படுவது.
இந்த தகவலை செப்டம்பர் 4-ஆம் தேதி திங்கட்கிழமை அன்று நிதி அமைச்சகம் (MOF) மற்றும் சமூக மற்றும் குடும்ப மேம்பாட்டு அமைச்சகம் (MSF) தெரிவித்துள்ளன.
இதன் மூலம் சுமார் 240,000 குழந்தைகள் பயன் அடைவார்கள்.கடந்த ஆண்டு வழங்கப்பட்டதை விட இந்த ஆண்டு ஒரு மடங்கு அதிகம்.
இந்த ஆண்டின் வரவு செலவு திட்டத்தில் இது குறித்து பேசப்பட்டது. இந்த தொகை ஆறு வயதுக்கு உட்பட்டவர்களுக்கு வழங்கப்பட உள்ளது.மேம்பாட்டு கணக்கு வைத்திருக்காதவர்கள்,அடுத்த ஆண்டு ஜூன் 30-ஆம் தேதிக்குள் திறக்க வேண்டும்.
இது குறித்த MSF குறுஞ்செய்தி மூலம் அனுப்பும்.