சிங்கப்பூரில் (நேற்று) செப்டம்பர் 1-ஆம் தேதி அதிபர் தேர்தல் மும்முரமாக நடைபெற்றது. இந்த அதிபர் தேர்தல் போட்டியில் தர்மன் சண்முகரத்னம், இங் கொக் சொங், டான் கின் லியான் ஆகியோர் கலந்து கொண்டனர்.
வாக்கு எண்ணைக்கையில் தர்மன் சண்முகரத்னம் முன்னிலை வகித்தார்.70.40% சதவீத வாக்குகளை பெற்று சிங்கப்பூரின் 9-வது அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அவர் தேர்தலில் வெற்றி பெற்றதை தேர்தல் துறை அறிவித்தது.
தர்மன் சண்முகரத்னத்துக்கு அவருடன் தேர்தல் களத்தில் போட்டியிட்ட டான் கின் லியான், இங் கொக் சொங் ஆகியோர் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
இங் கொக் சொங் 16% சதவீத விழுக்காட்டையும்,டான் கின் லியான் 14% சதவீத விழுக்காடு வாக்குகளைப் பெற்றுள்ளனர்.
தர்மன் சண்முகரத்னம் இந்தியா வம்சாவளியை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.