சிங்கப்பூர் தேசிய கலை மன்றமும், SMRT நிறுவனமும் தற்போது இணைந்து ஓர் புதிய முயற்சியை தொடங்கியுள்ளனர்.
அன்றாடம் 3 மில்லியன் பயணிகளிடம் உள்ளூர் பாடகர்களின் பாடல்களை கொண்டு சேர்க்க திட்டமிட்டுள்ளனர்.
நேற்று (ஆகஸ்ட்-30) முதல் போக்குவரத்து இடங்களில் உள்ளூர் கலைஞர்களின் பாடல்கள் ஒலிக்கப்படுகின்றனர்.
LRT ரயில் நிலையங்கள்,125 எக்ஸ்பிரஸ் மற்றும் பேருந்து முனையங்கள் ஆகிய இடங்களில் உள்ளூர் பாடல்கள் ஒலிக்கும்.
50 க்கும் மேற்பட்ட பாடல்களை கேட்கலாம்.தேசிய கலை மன்றம் பொது மக்களிடம் கருத்தாய்வு ஒன்றை நடத்தியது.
அவர்கள் உள்ளூர் பாடல்களை மீண்டும் மீண்டும் கேட்க விரும்புகிறார்கள் என்பது தெரிய வந்தது.
புதிய கலைஞர்களின் பாடல்கள் மூன்று மாதங்களுக்கு ஒரு முறை பாடல்களின் பட்டியலில் சேர்க்கப்படும்.