இன்னும் நம் உலகில் நல் உள்ளம் உடையவர்கள் இருக்கிறார்கள் என்பதை உறுதி படுத்தும் வீடியோ ஒன்று டிக்டாக்கில் பகிரப்பட்டுள்ளது.உலகில் பலரும் வாழ்க்கையில் ஓடிக்கொண்டே இருக்கிறார்கள்.
ஆனால் இங்கே ஒருவர் தனது நேரத்தை யாரென்றே தெரியாத ஓர் வயதான பெண்மணிக்கு ஒதுக்கி உதவியிருக்கிறார்.
டிக்டாக் பயனாளரான ஆகாஷா சுமார் 80 வினாடி கொண்ட வீடியோவை ஆகஸ்ட் 25-ஆம் தேதி வெளியிட்டார்.இந்த வீடியோ சுமார் 49,000 க்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர்.
அந்த வீடியோவில் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் ஒருவர் ஒரு வயதான பெண்மணிக்கு சாலையை கடக்க உதவி செய்த காட்சியைக் காணலாம்.
அந்த வயதான பெண்மணி வாக்கர் மற்றும் ஷாப்பிங் டிராலியுடன் இருந்தார். ஹெல்மெட் அணிந்த அந்த நபர் மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு அந்த வயதான பெண்மணிக்கு உதவினார்.
வயதான பெண்மணியின் ட்ராலியை ஹெல்மெட் அணிந்த நபர் தள்ளிக்கொண்டு அவருடன் வாக்கரை பயன்படுத்திய வயதானவர் சாலையை கடந்தார்.
ஹெல்மெட் அணிந்த அந்த நபரின் நல்மனதை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.
சாலையில் டிராஃபிக்கில் காத்திருந்த வாகன ஓட்டுநர் ஒருவரால் இந்த வீடியோ எடுக்கப்பட்டிருப்பது போல் தெரிகிறது.
நெட்டிசன்கள் பலரும் மோட்டார் சைக்கிள் ஓட்டுநரின் செயலை பாராட்டி தங்களின் கருத்துகளை கூறி வருகின்றனர்.
இந்நிகழ்வு கிம் பாங் சாலை மற்றும் தியோங் பாரு சந்திப்பில் நிகழ்ந்தது.