சிங்கப்பூரில் உட்லண்ட்ஸில் உள்ள கிண்டர்லேண்ட் பள்ளியில் 33 வயதுடைய ஆசிரியர் 23 மாத குழந்தையை படுக்க வைத்து வாயில் தண்ணீர் ஊற்றி குழந்தையை மோசமாக கையாண்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வந்தது.
அந்த பெண்ணின் மீது காவல்துறையில் புகார் கொடுக்கப்பட்டது.
லிம் மின் பணி நீக்கம் செய்யப்பட்டார். காவல்துறை செவ்வாய்க்கிழமை அன்று அவரை கைது செய்தது.
ஆகஸ்ட் 30-ஆம் தேதி (இன்று) நீதிமன்றத்தில் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. குழந்தையை மோசமாக நடத்தியதற்காக கைது செய்யப்பட்டார்.
வீடியோ இணைப்பு மூலம் உட்லண்ட்ஸ் போலீஸ் பிரிவு தலைமையகத்திலிருந்து ஆஜரானார்.
அரசு தரப்பு அவரை மனநல காப்பகத்தில் காவலில் வைக்க வேண்டும் என்ற மனுவை சமர்ப்பித்தது.
அதனை நீதிபதி ஏற்று கொண்டார். வரும் செப்டம்பர் மாதம் 13-ஆம் தேதி இந்த வழக்கு விசாரணைக்கு வரும் என்று கூறப்பட்டது.
குற்றம் நிரூபிக்கப்பட்டால் எட்டு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்படலாம். $8,000 வரை அபராதம் விதிக்கப்படும். அல்லது இவ்விரண்டும் விதிக்கப்படலாம்.
இந்த வாரம் மட்டுமே இரண்டு கிண்டர்லேண்ட் ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.