உட்லண்ஸில் உள்ள கிண்டர்லாண்ட் பாலர் பள்ளியில் ஆசிரியர் ஒருவர் குழந்தைகளை துன்புறுத்தும் காட்சிகள் கொண்ட வீடியோ சமூக வலைதளைங்களில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது.
ஆசிரியர் மீது காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டது.சிங்கப்பூர் காவல்துறையும்,குழந்தைப் பருவ மேம்பாட்டு அமைப்பு விசாரித்து வருவதாகவும் தெரிவித்தனர்.ஆசிரியர் குழந்தைகளை மோசமாக நடத்தியதன் காரணமாக பணி நீக்கம் செய்யப்பட்டார்
அவரை காவல்துறை கைது செய்தது.33 வயதுடைய அந்த பெண்ணை கைது செய்ததை குறித்து ஆகஸ்ட் 29-ஆம் தேதி தெரிவித்தது.
புதன்கிழமை நீதிமன்றத்தில் ஆசிரியர் மீது குற்றம் சாட்டப்படுகிறது.
குற்றம் நிரூபிக்கப்பட்டால் எட்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படலாம். $8,000 வரை அபராதம் விதிக்கப்படலாம். அல்லது இவ்விரண்டுமே விதிக்கப்படலாம்.