இந்தியாவில் உள்ள தமிழ்நாட்டை சேர்ந்த 37 வயதுடைய ராமலிங்கம் முருகன் என்பவர் தனது முதலாளிக்கு எதிராக வழக்கு தொடர்ந்தார்.
அதிக நெரிசல் நிறைந்த லாரியில் தொழிலாளர்களுடன் வேலை செய்யும் இடத்திற்கு அழைத்துச்செல்லப்பட்டார். அச்சமயத்தில் மழை பெய்து கொண்டிருந்தது. அவர் நான்காவது நபராக வண்டியிலிருந்து இறங்கினார். அப்போது எதிர்பாராத விதமாக சக தொழிலாளி ஒருவரால் தள்ளப்பட்டார். மழையில் நனைந்து விடாமல் இருப்பதற்காகவும் தஞ்சம் அடைவதற்காக அவசரமாக இறங்கியதாக சக ஊழியர் தெரிவித்தார்.
கீழே விழுந்ததால் அவருக்கு காலில் அடிபட்டது. வலி குறையாமல் இருந்ததால் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
அவருக்கு அங்கே அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அதனால் 5 மாத மருத்துவ விடுப்பில் இருந்தார். அவரின் வலியால் வேலை செய்ய முடியவில்லை.தனக்கு தேவையான அடிப்படை கடமைகளை அவரால் செய்து கொள்ள முடியவில்லை என்று அவர் தரப்பு வழக்கறிஞர் கூறினார்.
அதையடுத்து நிறுவனத்திற்கு எதிராக வழக்குத் தொடர முடிவெடுத்தார்.ரிகல் மரைன் சர்வீசஸ் நிறுவனத்திற்கு எதிராக நஷ்ட ஈடு கோரி 2022-ஆம் ஆண்டு வழக்கு தொடர்ந்தார் . சுமார் $100000(₹73,500) நஷ்ட ஈடாக கோரினார்.
நிறுவனம் தனக்கும் மற்ற ஊழியர்களுக்கும் முறையான பாதுகாப்புடைய போக்குவரத்தை அளிக்க வில்லை அல்லது அதனை செயல்படுத்த தவற விட்டதாக கூறினார்.
நிறுவனம் இவரின் கருத்துகளை மறுத்தது.முருகனின் கவனகுறைவால் தான் அடிப்பட்டதாகவும், அவருக்கு வழங்கப்பட்ட மருத்துவ செலவுகள் மற்றும் மருத்துவ விடுப்பு ஊதியத்திற்கும் எதிர் உரிமை கோரி நிறுவனம் முன்வைத்தது.
நீதிபதி ஆகஸ்ட் 17-ஆம் தேதி அன்று இந்த வழக்குக்கு தீர்ப்பளித்தார்.முருகனுக்கு ஆதரவாக நீதிபதி தீர்ப்பளித்தார்.முருகனுக்கு ஏற்பட்ட விபத்துக்கு நிறுவனம் தான் காரணம் என்றும் தெளிவாக கூறினார்.
வழக்கில் வெற்றி பெற்ற முருகன் தனது வழக்கறிஞர் மூலம் அறிக்கை வெளியிட்டார். இந்த விவாகரத்தை விரைவில் முடிக்க எதிர்பார்த்து கொண்டிருந்ததாக கூறினார்.நான் அனுபவித்த வலிக்கு உரிய இழப்பீடு கிடைக்கும் என்று நம்பியதாகவும் கூறினார்.
அதோடு இதன் மூலம் மற்ற தொழிலாளர்களும் தனது முடிவால் ஈர்க்கப்படுவார்கள் என்றார்.
இது போன்று விபத்துக்களை சந்தித்த ஒரு சில தொழிலாளர்கள் உரிய இழப்பீடு கூறாமல் இருக்கலாம் என்றார்.வழக்கு தொடர்ந்தால் சிங்கப்பூருக்கு வர முடியாமல் போய்விடுமோ என்ற பயம் இருக்கலாம் என்றார். அத்தகையோர் முன்வருவார்கள் உதவியை நாடுவார்கள் என்று நம்புவதாக கூறினார்.