சிங்கப்பூரில் ஊழல் தடுப்பு அமலாக்க துறை அதிகாரிகள் ஆகஸ்ட் 14 மற்றும் ஆகஸ்ட் 25 க்கு இடையில் சோதனை நடத்தியது.
சோதனை நடவடிக்கையில் 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.அவர்களில் இரண்டு இளைஞர்கள் அடங்குவர்.ஆண்ட்ராய்டு பயனீட்டாளர்களை குறிவைத்து மோசடியில் செயல்பட்டுள்ளதாக சந்தேகிக்கப்படுகிறது.
அவர்கள் வங்கி தொடர்பான மால்வேர் மோசடியில் செயல்பட்டதாக சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டனர்.
இந்த தகவலை காவல்துறை அதிகாரிகள் ஆகஸ்ட் 26-ஆம் தேதி (சனிக்கிழமை) வெளியிட்டது.
முதற்கட்ட விசாரணையில் கைது செய்யப்பட்டவர்கள் வங்கி கணக்குகள் மூலம் மோசடி குற்றம் புரிவதற்கு மிகவும் எளிதாக அமைந்துள்ளதாக தெரிய வந்துள்ளது.
ஆண்ட்ராய்டு பேக்கேஜ் தொடர்பான மால்வேர் மோசடிகள் ஜனவரி மாதம் முதல் அதிகரித்து வருவதாக காவல்துறை தெரிவித்தது.
சமூக ஊடகங்களில் வரும் விளம்பரங்களுக்கு பாதிக்கப்பட்டவர்கள் பதிலளிப்பதன் மூலம் ஆண்ட்ராய்டு பேக்கேஜ் கிட்டை பதிவிறக்கம் செய்ய வேண்டும் என்று மோசடிகாரர்களிடமிருந்து தகவல் வரும். அதனை பதிவிறக்கம் செய்தவுடன் பாதிக்கப்பட்டவர்களின் மொபைல் மால்வேர் மூலம் பாதிக்கப்படும்.
அதன்பின் மோசடிக்காரர்கள் தொலைபேசி மூலம் அல்லது குறுஞ்செய்தி மூலம் தொடர்புகொள்வார்கள். அவர்கள் கூறும்படி செயல்படுமாறு கூறுவார்கள்.பின்னர் பாதிக்கப்பட்டவர்களின் மொபைலை முழுவதுமாக தங்கள் வசப்படுத்தி மோசடி செயலில் ஈடுபடுகிறார்கள்.
அதோடு மோசடிக்காரர்கள் தங்களின் தடயங்களை நீக்குகின்றனர். அதாவது பாதிக்கப்பட்டவர்களின் மொபைல் போனுக்கு வரும் வங்கி தொடர்பிலான SMS மற்றும் மின்னஞ்சல் அறிவிப்புகளையும் நீக்கிவிடுவதாகவும் கூறியது.
அங்கீகரிக்கப்படாத அல்லது சந்தேகத்த்திற்கிடமான லிங்களை கிளிக் செய்வதோ, தெரியாத QR களை ஸ்கேன் செய்வதோ அல்லது மூன்றாம் தரப்பு இணையங்களிலிருந்து ஆப்களை பதிவிறக்கம் செய்வதோ கூடாது என்று பொதுமக்களுக்கு காவல்துறை அறிவுறுத்தியுள்ளது .