உணவு பிரியர்களே இது உங்களுக்கான தகவல்…….. பல்வேறு நாட்டு ஸ்ட்ரீட் ஃபுட்களை ஒரே இடத்தில் ருசிக்க விரும்புவாரா நீங்கள்……… உங்களுக்கான ஓர் மகிழ்ச்சியான செய்தி……..
சிங்கப்பூரில் ஜூரோங் பாயிண்ட்டில் உணவு திருவிழா கண்காட்சி நடைபெற உள்ளது.வரும் ஆகஸ்ட் 28-ஆம் தேதி முதல் செப்டம்பர் 10-ஆம் தேதி வரை உணவு விழா கண்காட்சி நடைபெறும்.
உணவு சாவல்கள்,அதிர்ஷ்ட குலுக்கல், நேரலை நிகழ்ச்சிகளையும் கண்டு களிக்கலாம்.Festival Fair அக்டோபர் மாதம் 15-ஆம் தேதி வரை நடைபெறும்.
ஆகஸ்ட் 28-ஆம் தேதி உணவு விழா கண்காட்சி தொடங்க உள்ளது.
உணவு விழா கண்காட்சியில் ஜப்பான், தாய்லாந்து, சீனா, மலேசியா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளில் விற்கப்படும் Street Foods கிடைக்கும்.
அங்கு 20 க்கும் மேற்பட்ட ஸ்டால்கள் இடம்பெறும்.
அங்கு கொரியா நாணய வடிவ பான்கேக்,ரோஸ்டி ஹவுஸின் UFO பர்கர்,டொர்னாடோ உருளைக்கிழங்கு போன்ற பல உணவுகளை ருசித்து மகிழலாம். அதோடு மிக பிரபலமான Cinnamon Rolls அதனையும் ருசிக்கலாம்.
இப்படி ஓர் அரிய வாய்ப்பை உணவு பிரியர்களே மிஸ் பண்ணிடாதீங்க….