நிலவில் சாதனைப் படைத்த சந்திரயான் -3 விக்ரம் லேண்டர் தரையிறங்கிய இடத்திற்கு பெயரிட்ட நரேந்திர மோடி……

பெங்களூரில் நரேந்திர மோடி இஸ்ரோ விஞ்ஞானிகளை இன்று (ஆகஸ்ட் 26) காலை சந்தித்தார். அவர்கள் முன்னிலையில் முக்கிய அறிவிப்புகளை அறிவித்தார்.

நிலவில் சந்திரயான் -3 வெற்றிகரமாக தரையிறங்கிய ஆகஸ்ட் 23-ஆம் தேதியை `தேசிய விண்வெளி தினமாக´கொண்டாடப்படும் என்று தெரிவித்தார்.

நிலவில் சந்திரயான் -3 விக்ரம் லேண்டர் தரையிறங்கிய இடம் மற்றும் சந்திரயான் -2 லேண்டருக்கு பெயர்களை அறிவித்தார்.

சந்திரயான் -3 விக்ரம் லேண்டர் தரையிறங்கிய இடத்திற்கு `Shiv Shakthi´ என்று பெயரிடப்படும். சந்திரயான்- 2 லேண்டர் `Tiranga´ என பெயரிடப்படும் என்று அறிவித்தார்.